திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூரில் தவெக அதிரடி வெற்றி: தமிழகத்தை ஆளப்போகும் விஜய்!

0
3

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தவெக-வின் அலை வீசி வரும் நிலையில், முக்கியத் தொகுதிகளின் நிலவரம் பின்வருமாறு, இத்தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: திமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியைத் தழுவியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை தோல்வியடைந்த போதிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். ராசிபுரம் தொகுதியில் திமுக அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்தி, தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விஜய்யின் இந்த வரலாற்று வெற்றியைத் தேசியத் தலைவர்களும் திரையுலகினரும் கொண்டாடி வருகின்றனர்:
தவெக-வின் இந்த மாபெரும் வெற்றிக்காகத் தலைவர் விஜய்யைத் தொலைபேசி வாயிலாக அழைத்து ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“நடிகன் நாடாள முடியாது என்ற விமர்சனங்களைத் தகர்த்து எவராலும் விஜய் ஆக முடியாது என்பதை அவர் நிரூபித்துவிட்டார்” என நடிகர் சிபி சத்யராஜ் பாராட்டியுள்ளார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், நானி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விஜய்க்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக 108 தொகுதிகளில் தவெக பெற்றுள்ள இந்த வெற்றி, தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலுக்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.