புதிய அமைச்சரவை: முக்கிய ஆலோசனையில் விஜய்

0
1

தமிழக அரசியல் சூழலில் முக்கிய திருப்பமாக, புதிய அமைச்சரவை அமைப்பை குறித்து நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

நாளை ஆட்சியை அமைக்க கவர்னரிடம் உரிமை கோர உள்ள நிலையில், அமைச்சரவை பட்டியல் தொடர்பான முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில், அமைச்சரவை அமைப்பு, முக்கிய துறைகள் ஒதுக்கீடு, அனுபவம் மற்றும் இளைஞர்களுக்கு இடமளித்தல் போன்ற அம்சங்கள் விரிவாக பேசப்பட்டு வருகிறது.

அமைச்சரவை பட்டியலில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன், சத்தியபாமா, விஜயலட்சுமி, அருண்ராஜ், விஜய் சரவணன், பார்த்திபன் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக சமநிலையை கருத்தில் கொண்டு, பல்வேறு பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை முடிவுகள் மாநில அரசியல் நிலவரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது. விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களிடையே அதிகரித்துள்ளது.