வரும் தேர்தலிலும் தனித்துப் போட்டி… சீமான்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், ஈழப் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மறைமலைநகர் கார்ப்பரேசன் விளையாட்டு திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சமீபத்திய சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பேசிய அவர், “தேர்தல் தோல்வி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாம் ஒரு லட்சியத்திற்காக போராடி வருகிறோம். தூய சக்தி, தீய சக்தி என எவருடனும் கூட்டணி கிடையாது. வரவிருக்கும் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம். நிச்சயமாக மக்கள் எங்களை தேடும் காலம் விரைவில் வரும்” என ஆவேசமாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முழுவதும் ஈழத்தமிழர் நினைவு பாடல்கள் மற்றும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.