Home செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

பரனூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

0

செங்கை – பரனூர் சுங்கச்சாவடியில் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய கட்டண விவரங்களின்படி, வேன்களுக்கான மாதாந்திர கட்டணம் ₹4015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்துகளுக்கான மாத கட்டணம் ₹8410 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கான ரிட்டன் கட்டணம் ₹725 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சுங்கச்சாவடி அருகே வசிக்கும் உள்ளூர்வாசிகள் பயன்படுத்தும் மாதாந்திர பாஸ் கட்டணமும் ₹350 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு காரணமாக தினசரி பயணம் செய்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக லாரி மற்றும் கனரக வாகனங்களின் கட்டண உயர்வு காரணமாக காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து துறையினரின் கணிப்பின்படி, டோல் கட்டண உயர்வு நேரடியாக சரக்கு கட்டணத்தையும் பாதிக்கும் என்பதால், அடுத்த சில நாட்களில் சந்தை விலைகளிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீர் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version