இந்த வார ஓடிடி ரிலீஸ்: ஹாட் ஸ்டார், ஜீ5, ஆஹாவில் புதிய படங்கள்

0
3

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து காத்திருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் ஆஹா போன்ற பிரபல தளங்களில் பல மொழிகளில் உருவான புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.

2019ஆம் ஆண்டு முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் தொடர் “Euphoria” தனது 3வது சீசனுடன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. இளைஞர்களின் மனநிலை, காதல், போதை மற்றும் சமூக அழுத்தங்களை மையமாகக் கொண்ட கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் உள்ளார்ந்த போராட்டங்களுடன் வாழ்கின்றனர். புதிய சீசனில் அவர்களின் உறவுகள் மேலும் சிக்கலாக மாறுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.

மராத்தி மொழியில் உருவான ரொமான்டிக் டிராமா திரைப்படமான “Rubaab” ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சி பூர்வமான கதை. வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் மற்றும் நிஜ வாழ்க்கை இடையிலான முரண்பாடுகள் வெளிப்படுகிறது. இரு மனங்களின் பயணம் எவ்வாறு மாறுகிறது என்பதே கதையின் அம்சமாகும்.

அதேபோல், மலையாளத்தில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் “Sambhavam Adhyayam Onnu” ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி திரில்லர் படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு மர்ம சம்பவத்தைச் சுற்றி நகரும் சைக்கலாஜிக்கல் திரில்லர் இந்த கதை. உண்மை மற்றும் கற்பனை இடையே குழப்பம் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெறுவது காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், முடிவில் அதிர்ச்சியூட்டும் திருப்பம் காத்திருக்கிறது.

மேலும், உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் திரைப்படத் தொடர் எவ்வாறு உருவானது என்பதை விளக்கும் “Finding Harry: The Craft Behind the Magic” என்ற ஆவணப்படமும் அதே தளத்தில் வெளியாகியுள்ளது. ஹாரி பாட்டர் படங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விளக்கும் ஆவணப்படம். படப்பிடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் கலைநயம் குறித்து விரிவாக கூறுகிறது. திரைமறைவு பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

பெங்காலி மொழியில் உருவான காமெடி-ஹாரர் திரைப்படமான “Bhanupriya Bhooter Hotel” ஜீ5 தளத்தில் வெளியாகி, திகிலும் நகைச்சுவையும் கலந்த அனுபவத்தை வழங்குகிறது. ஒரு ஹோட்டலில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை, மறைந்திருக்கும் ரகசியங்களை மையமாகக் கொண்ட கதை. பயமும் நகைச்சுவையும் இணைந்த நிகழ்வுகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

இதேவேளை, தெலுங்கில் உருவான க்ரைம் திரில்லர் “Aa Gang Repu 3” ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது. குற்ற உலகை மையமாகக் கொண்ட திரில்லர் கதை. ஒரு குழுவின் செயல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் சித்தரிக்கப்படுகிறது. நடக்கும் சம்பவங்கள் அதிரடி மற்றும் பதட்டத்தை உருவாக்குகின்றன.

இதனைத் தொடர்ந்து “Pochamma” என்ற திரில்லர் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. குற்றம் சார்ந்த சமூகத்தை மையமாகக் கொண்ட திரில்லர் கதை. ஒரு குழுவினரின் செயல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் சித்தரிக்கப்படுகிறது. இப்படத்தில் நடக்கும் சம்பவங்கள் அதிரடி மற்றும் ரசிகர்களுக்கு பதட்டத்தை உருவாக்குகின்றன.

மொத்தத்தில், பல்வேறு மொழிகள் மற்றும் கதைக்களங்களில் வெளியாகும் இந்த வார ஓடிடி வெளியீடுகள், ரசிகர்களுக்கு பரவலான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகின்றன.