ஏப்.23: தேர்தல் அன்று தோனி ரிடர்ன்?

0
6

‘OG is Back’ என ரசிகர்கள் உற்சாகப்படும்படி, எம்.எஸ். தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர், ஏப்ரல் 23ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கீழ் நிலைகளில் உள்ளது. எனினும் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் எழுச்சி காட்டியுள்ளது. அணியின் பேட்டிங் வரிசை மற்றும் காம்பினேஷன் தற்போது நல்ல நிலையில் உள்ளது.

இந்நிலையில், தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, அவர் சர்ஃபராஸ் கான் இடத்தில் களமிறங்குவாரா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. அதேசமயம், விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் அவர் ஏற்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், தற்போதைய அணிக் காம்பினேஷனை மாற்ற வேண்டாம் என்ற கருத்தை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். தோனியின் வருகை சிஎஸ்கே அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.