கோவளத்தில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 360 மாணவிகள் பங்கேற்று, தங்களது திறமைகளை காட்டி அசத்தினர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கு இடையிலான கபடி போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் 10 குறுவட்ட அளிலான 30 பள்ளிகளை சேர்ந்த 360 மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் செங்கல்பட்டு புனிதமேரி பள்ளி மாணவிகளும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் கோவளம் அரசு பள்ளி மாணவிகளும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் புதுப்பட்டினம் அரசு பள்ளி மாணவிகளும் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் வாழ்த்து தெரிவித்தனர்.





