தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்க உள்ள நிலையில், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் Vijay தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம் தவெகவுக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து விஜய் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாளைய சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.
தொடர்ந்து நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் புதிய அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



