Home செங்கல்பட்டு குரோம்பேட்டையில் பெண் காவலருடன் தகராறு: வழக்கறிஞரின் செயலால் பரபரப்பு

குரோம்பேட்டையில் பெண் காவலருடன் தகராறு: வழக்கறிஞரின் செயலால் பரபரப்பு

0

தாம்பரம் அருகே குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருடன் வழக்கறிஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த மே 9ஆம் தேதி குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள எம்.ஐ.டி மேம்பாலம் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஜெயக்குமார் என்ற வழக்கறிஞர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் பெண் காவலருடன் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருமையில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திடீரென சாலையில் படுத்து கொண்டு தகராறு செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொது இடத்தில் காவல் துறையினரிடம் மரியாதையற்ற முறையில் நடந்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version