Home செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மதுக்கடைகள் மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மதுக்கடைகள் மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

0

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் நான்கு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இரண்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் கேளம்பாக்கம் பகுதியில் இருந்த ஒரு மதுக்கடையும், வாலாஜாபாத் அருகே இருந்த மற்றொரு மதுக்கடையும் அதிகாரிகளின் நடவடிக்கையால் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகள் சமூக பிரச்சினைகளை உருவாக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இடையூறு விளைவிக்கும் மற்ற மதுக்கடைகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version