Home செங்கல்பட்டு தேசிய ஹாக்கி போட்டியில் சென்னை ஜி.எஸ்.டி அணி அபார வெற்றி

தேசிய ஹாக்கி போட்டியில் சென்னை ஜி.எஸ்.டி அணி அபார வெற்றி

0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 5வது தேசிய ஹாக்கி போட்டியில் சென்னை ஜி.எஸ்.டி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.

கே.ஆர் குழும கல்வி நிறுவனங்கள் மற்றும் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் இந்த தேசிய அளவிலான போட்டியில், வருமான வரித்துறை, டில்லி ஏர்போர்ஸ், ஜாம்ஷெட்பூர் நேவல் டாடா உள்ளிட்ட நாட்டின் 16 முன்னணி அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று காலை நடைபெற்ற 21வது லீக் போட்டியில் சென்னை ஜி.எஸ்.டி அணி, கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி 8-4 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணிக்காக பிச்சைமணி 2 பீல்டு கோல்கள் அடித்தார். பாலாஜி ஒரு கோல், ஆனந்த் 2 பெனால்டி கார்னர் கோல்கள், பிரபு ஒரு பெனால்டி கார்னர் கோல், ஜான் மற்றும் துஷால் குமார் தலா ஒரு பீல்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

கர்நாடகா அணிக்காக ரெட்டி நாகர்ஜுனா, தீக்‌ஷிதா மற்றும் நீலகலஹள்ளி தனுஷ் கோல்கள் அடித்தனர். சென்னை ஜி.எஸ்.டி அணியின் இந்த வெற்றி ஹாக்கி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version