தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நாளை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 3 மையங்களில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகளுக்கான எண்ணிக்கை, ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடைபெறும். மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளுக்கான எண்ணிக்கை மதுராந்தகத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கான எண்ணிக்கை குரோம்பேட்டையில் உள்ள MIT கல்லூரியில் நடைபெற உள்ளது.
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளதால், பாதுகாப்பு பணிக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
#VoteCounting #Chengalpattu #Election2026 #TamilNadu #EVM #BreakingNewsTamil #ResultsDay





