Sunday, April 12, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
Home Uncategorized செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

0
3

செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதிகபடியாக நெல் பயிரிடப்படும் வில்லியம்பாக்கம் பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வில்லியம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா ஏகாம்பரம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதனை அறிந்து சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here