செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் Thiyagarajan இன்று (மே 14) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பல்வேறு மக்கள் நல கோரிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பாடு, பொதுமக்களுக்கு தேவையான அரசு சேவைகள் மற்றும் உடனடி தீர்வு தேவைப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆட்சியரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தொகுதி வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சந்திப்பு செங்கல்பட்டு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
