Home செங்கல்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் நன்கொடை!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் நன்கொடை!

0

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பல்வேறு நவீன கருவிகளை தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாக வழங்கியது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கியல் துறையில், உள் மற்றும் புறநோயாளிகளுக்கு, விளையாட்டு காயங்களோடு வருபவர்களுக்கு மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை, சிறப்பு கருவிகள் தேவை என, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.

இதை தொடர்ந்து, தனியார் நிறுவனம் சமூக பாதுகாப்பு பொறுப்பு நிதியில் இருந்து, மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சைக்கான சிறப்பு கருவிகள் அளிக்க முடிவு செய்தது.

இந்த கருவிகளை மருத்துவமனை பயன்பாட்டிற்கு, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார். இதில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

NO COMMENTS

Exit mobile version