செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் சாதனையாளர் விருது

0
2

ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரி கோல்டன் ஜூபிளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற சாதனையாளர் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் கிருத்திகா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

செங்கல்பட்டில் நடைபெற்ற இந்த விழாவில் கல்வி, சமூக சேவை மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய முன்னாள் மாணவர்கள் மற்றும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட கிருத்திகா தேவி, மாணவர்கள் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் சமூக மாற்றத்தின் முக்கிய மையங்களாக திகழ்கின்றன என்றும் பேசினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டாக்டர் ஜே. ஜான்சன் மற்றும் தமிழக நீதி சங்க தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோருக்கு அவர் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

விழாவில் முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் 50 ஆண்டு பயணத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த விழா, முன்னாள் மாணவர்களின் ஒற்றுமையையும் சமூகப் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.