Home செங்கல்பட்டு செங்கல்பட்டு வாக்காளர்களே இதை கவனியுங்க…

செங்கல்பட்டு வாக்காளர்களே இதை கவனியுங்க…

0

செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான புகார்களை உடனடியாக பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள், பணப்பட்டுவாடா, வாக்காளர் அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தொகுதி வாரியாக சிறப்பு தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சோழிங்கநல்லூர் – 9445190015, பல்லாவரம் – 9444420044, தாம்பரம் – 9384094738, செங்கல்பட்டு – 9445000414, திருப்போரூர் – 9962450100, செய்யூர் – 9894910302, மதுராந்தகம் – 9445000415 ஆகிய எண்களில் அழைத்து புகார்களை தெரிவிக்கலாம்.

புகார் அளிக்கப்பட்டவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முறையாகவும், சீராகவும் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு சட்டவிரோத செயல்களையும் கண்டால் அதை உடனடியாக புகாரளிக்க வேண்டும் என்றும், ஜனநாயக கடமையை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version