Home செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு – இளைஞர்களே ரெடியா?

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு – இளைஞர்களே ரெடியா?

0

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையில், மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பணி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களும் வெளியாகியுள்ளன.

சித்த மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000

யுனானி மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BUMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000

மருந்தாளுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 750 (தினசரி)

மருந்து வழங்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 750 (தினசரி)

பல்நோக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 300 (தினசரி)

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/02/2024022291.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் – 603001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version