Home செங்கல்பட்டு செயற்கை கால்களை வழங்கிய செங்கல்பட்டு ஆட்சியர்

செயற்கை கால்களை வழங்கிய செங்கல்பட்டு ஆட்சியர்

0

டைபெற்ற மக்கள் நலன் காக்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.4.55 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் க்யூரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவி, பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

NO COMMENTS

Exit mobile version