வண்டலூர் அருகே மாணவர்கள் மோதல்: விசாரணையில் போலீசார்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள படப்பை பகுதியில், தனியார் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலின்படி, மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ரவி (28) என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து ரவிக்கும் மாணவர்களில் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ரவி அந்த மாணவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், காதல் தொடர்பான பிரச்சினை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.