செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூன் 8, திங்கள்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மனுக்கள் வழங்க வருபவர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை கட்டாயம் இணைத்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், தேவையுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.





