“நாளை தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு – வணிகர்கள் சங்கம் அதிரடி!

0
4

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து, நாளை (மே 20) மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள மருந்துக் கடைகள் அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் (AIOCD) அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாகப் பெரு நிறுவனங்களால் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது (E-Pharmacy) பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பாரம்பரிய மருந்து சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்த முறையான விதிகளை வகுக்க வேண்டும் என்றும், தடையற்ற இ-பார்மசி முறையை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நாளை ஒரு நாள் முழுவதும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனைக் கடைகள் முழுமையாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு மருத்துவமனை வளாகங்களில் உள்ள மருந்துக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக மருந்து வணிகர்கள் கையில் எடுத்துள்ள இந்த அதிரடிப் போராட்ட அறிவிப்பு குறித்து உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?