படப்பை: கல்லூரி மாணவர்கள் வெட்டிக்கொலை

0
3

சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் இருவர், படப்பை அருகே மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள் பரத் (22) மற்றும் சீனு (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் படப்பை அருகே உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல், திடீரென வீட்டுக்குள் புகுந்து மாணவர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொலை சம்பவத்தை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம், கல்லூரி தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இந்த கொலை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் அருகிலுள்ளவர்களின் தகவல்களை அடிப்படையாக கொண்டு தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.