விஜய் மகளின் ஒற்றை இன்ஸ்டா ஸ்டோரி: குடும்ப சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியா? ரசிகர்கள் உற்சாகம்!

0
5

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலில் கால்பதித்த பிறகு, அவரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறு அசைவும் ஊடக வெளிச்சத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அவரது குடும்ப வாழ்க்கை குறித்துப் பரவி வந்த பல்வேறு யூகங்களுக்கு, அவரது மகள் திவ்யா சாஷா பகிர்ந்ததாகக் கூறப்படும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபகாலமாக விஜய் – சங்கீதா தம்பதியினரிடையே விரிசல் என்றும், அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது பெயருக்குப் பின்னால் அம்மாவின் பெயரை இணைத்ததும், தங்கையின் பட்டமளிப்பு விழாவிற்கு விஜய்க்குப் பதிலாகச் சஞ்சய் சென்றதும் விவாதங்களை ஏற்படுத்தின.

மேலும், நடிகை திரிஷாவுடன் விஜய்யை இணைத்துச் சில வதந்திகள் கிளம்பிய நிலையில், நேற்று வாக்களித்த திரிஷா விஜய்யின் பாடலைப் பின்னணியாகப் பயன்படுத்தியது அந்த விவாதங்களை மீண்டும் தூண்டியது.

இந்தச் சூழலில், விஜய்யின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான “ஜனநாயகன்” படத்தின் உணர்ச்சிகரமான “கண்ணே மணியே கன்னிமையே” பாடலை ஸ்டோரியாகப் பகிர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தற்செயலாகப் பகிரப்பட்ட பாடலா அல்லது “நாங்கள் அப்பா பக்கமே இருக்கிறோம்” என்று குடும்பத்தினர் மறைமுகமாக உணர்த்தும் சைகையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் மகளின் கணக்கு (Private Account) என்பதால், அந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் இதனைப் பெரிய அளவில் பகிர்ந்து “ஆல் ஈஸ் வெல்” (All is Well) என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் விஜய்க்கு, குடும்பத்தின் ஆதரவு குறித்த இந்தச் சிறு தகவல் அவரது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.