பெல்ஜியத்தில் வெற்றி பெற்ற அஜித்குமார் சென்னை வருகை: தேர்தலில் வாக்களிக்க திரும்பினார்

0
5

நடிகரும், கார் பந்தய வீரருமான Ajith Kumar பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின் இன்று சென்னை திரும்பினார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சினிமாவை விட கார் ரேசிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், தனது அடுத்த திரைப்படப் படப்பிடிப்பை கூட தாமதப்படுத்தி இந்த விளையாட்டில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

உலகின் மிகச் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series போட்டியில் அஜித் குமார் ரேசிங் அணி சிறப்பாக செயல்பட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன.

போட்டிக்குப் பிறகு அஜித் தனது அணியினருடன் வெற்றியை கொண்டாடிய வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, இந்தியக் கொடியுடன் போடியம் மீது நின்று கொண்டாடிய தருணம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அஜித் குமார் இன்று சென்னை திரும்பியுள்ளார். பிரபல நடிகராக மட்டுமல்லாமல் பொறுப்பான குடிமகனாகவும் அவர் செயல்படுவது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.