செங்கல்பட்டு தமிழ்நாடு வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பாக மின்சார உயர்வு கட்டணத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வெல்டிங் தொழில் செய்யும் அனைவருக்கும் மின்சாரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும், இரும்பு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரி உயர்வையும் திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெல்டிங் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
