Home Trending/Viral செய்தியாளர்களிடம் அத்துமீறிய போலீஸ் – இதைக் கூட செய்யக் கூடாதுன்னா எப்படி?

செய்தியாளர்களிடம் அத்துமீறிய போலீஸ் – இதைக் கூட செய்யக் கூடாதுன்னா எப்படி?

0

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தலைமையிலான தவெக அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், தெளிவான பெரும்பான்மை இன்னும் உறுதியாகவில்லை என்பதால், புதிய ஆட்சி அமைப்பைச் சுற்றி பல்வேறு அரசியல் நகர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னை புதிய விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய இன்னோவா கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. இந்த வாகனங்கள், பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கார்கள் குறித்து செய்தி சேகரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும், சில அலுவலர்களும் செய்தியாளர்களை தடுத்து நிறுத்தினர்.

மேலும், கார்களை படம் பிடிக்க கூடாது என எச்சரித்ததுடன், சிலரின் செல்போன்கள் மற்றும் புகைப்பட கருவிகளை பறிக்க முயன்றனர். இதனால் செய்தியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

NO COMMENTS

Exit mobile version