தவெக தலைவர் விஜய் மீது வழக்கு? புலி பட வருமான வரி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி!

0
1

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மீது, ‘புலி’ பட வருமானத்தை மறைத்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்தின் போது வருமான வரித்துறை நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக எழுந்துள்ளது.

‘புலி’ படத்திற்காகப் பெற்ற வருமானத்தை விஜய் முறையாகக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாக வருமான வரித்துறை விசாரணை நடத்தியிருந்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மனுவை உடனடியாக விசாரணைக்குப் பட்டியலிட அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், நீண்ட நாட்களுக்கு முந்தைய இந்த விவகாரம் மீண்டும் சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

விஜய் ஏற்கனவே 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் பேசியுள்ள சூழலில், இந்தச் சட்டப் போராட்டம் அவரது அடுத்தகட்ட நகர்வுகளைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.