செங்கல்பட்டு: புதிய மழைநீர் வடிகால்வாய் அமைப்பு

0
2

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட Vedachalam Nagar பகுதியில் சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயால் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், புதிய வடிகால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வேதாசலம் நகர் ஏகாம்பரனார் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் தற்போது சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்பகுதி கவுன்சிலர் மற்றும் சமூக ஆர்வலர்கள், புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் மற்றும் பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு பொது நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணி நிறைவடைந்தால் அப்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.