திருப்போரூர் MLA பா.விஜயராஜ் பா.விஜயராஜ் இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு மக்கள் நல மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முதலில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பா.விஜயராஜுடன், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சி.வி. தினா மற்றும் செய்யூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் எம்.ஜி.கே. மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு நிலை, பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் மக்கள் நல கோரிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரையும் பா.விஜயராஜ் சந்தித்தார். இந்த சந்திப்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் எம்.எஸ். பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்புகள் மூலம் மக்கள் நலன் மற்றும் தொகுதி மேம்பாட்டு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
