Home Politics அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

0

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது 58 சதவீதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி (DA) 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 60 சதவீதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 16 லட்சம் பேர் நேரடியாக பயனடைவார்கள்.
அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மாநில அரசும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
அதே நேரத்தில், இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,230 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு இந்த நிதிச்சுமையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக அகவிலைப்படி உயர்வு அவசியமாக இருந்ததாக ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த உயர்வு ஊழியர்களின் குடும்பச் செலவுகளை சமாளிக்க உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version