“விஜய் முதல்வராவதை தடுக்க நான் தரங்கெட்ட ஆள் இல்லை” – ரஜினிகாந்த்

0
4

நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய விமர்சனங்களுக்கு பதிலளித்து முக்கிய விளக்கமளித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் அளவுக்கு தரங்கெட்ட ஆள் நான் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தன்னை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் பரவியதாக கூறிய ரஜினிகாந்த், “அவற்றுக்கு நான் பதில் அளிக்கவில்லை என்றால் அது உண்மை என மக்கள் நினைத்து விடுவார்கள்” என்றார்.

மேலும், M. K. Stalin தனது 40 ஆண்டுகால நண்பர் என்றும், அரசியலை தாண்டியும் அந்த நட்பு தொடர்வதாகவும் கூறினார். “சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியடைந்தது எனக்கு வருத்தமளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

விஜயின் அரசியல் வெற்றி குறித்து பேசும்போது, “விஜய் வென்றவுடன் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். அவர் வென்றதில் எனக்கு பொறாமை இல்லை. தனியாக வெற்றி பெற்றது ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறினார். மேலும், “மக்களின் எதிர்பார்ப்புகளை விஜய் நிச்சயம் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மிக முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்ட ரஜினிகாந்த், விஜயின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதேநேரத்தில், “நான் அரசியல் கட்சி தொடங்கி இருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன்” என அவர் கூறியிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.