Home Trending/Viral விமான விபத்திற்கு செல்பியே காரணம்?

விமான விபத்திற்கு செல்பியே காரணம்?

0

தென்கொரியாவில் பயிற்சியின்போது நடந்த விமான விபத்துக்கான விசாரணை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Daegu நகரில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில், இரண்டு பயிற்சி போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன.

விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த விபத்துக்கு முக்கிய காரணமாக விமானியின் அலட்சியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறுதி பயிற்சியின்போது விமானி, தனது சேவையின் கடைசி பறப்பை நினைவுகூரும் வகையில் நடுவானில் செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிரே வந்த மற்றொரு விமானத்தை கவனிக்காமல் போனதால், இரண்டு விமானங்களும் அதிவேகத்தில் மோதிக்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதும், இரு விமானிகளும் அவசரமாக பாராசூட் மூலம் வெளியேறி உயிர் தப்பினர். எனினும், விமானங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த சம்பவம் தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ராணுவம் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணை முடிவில், இந்த விபத்து முழுக்க முழுக்க மனித தவறால் ஏற்பட்டது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த விமானங்களை சீரமைக்க சுமார் 880 மில்லியன் வோன் (இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானிக்கு 88 மில்லியன் வோன் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம், பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதின் ஆபத்துகளை மீண்டும் நினைவூட்டும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version