படப்பை அருகே கார் – பேருந்து மோதல் – 3 பேர் படுகாயம்

0
1

சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணாச்சலம் (42) என்பவர், தனது நண்பர்களான முரளி (45), ஆசிப் அலி (40) ஆகியோருடன் நேற்று (மே 1) அதிகாலை சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். வாலாஜாபாத் – வண்டலூர் நெடுஞ்சாலையில் படப்பை அருகே, முன்னால் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. அதில் பயணம் செய்த மூவரும் வாகனத்திற்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

#Accident #Chengalpattu #Padappai #RoadAccident #BreakingNewsTamil