Home செங்கல்பட்டு ஒத்திவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

ஒத்திவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

0

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்திவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், பா.விஜயராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, போதிய அளவில் லாரி மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், சுமார் 11 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது நிலவி வரும் மழை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய அளவில் தார்ப்பாய்கள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை கேட்ட எம்எல்ஏ பா.விஜயராஜ், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேவையான தார்ப்பாய்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், நெல் மூட்டைகள் விரைவாக கிடங்குகளுக்கு அனுப்ப போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version