Home செங்கல்பட்டு ஓலா எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் சென்டரில் தீ: 175 பைக்குகள் எரிந்து நாசம்

ஓலா எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் சென்டரில் தீ: 175 பைக்குகள் எரிந்து நாசம்

0


சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள ஓலா எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் சென்டரில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 175 எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து சேதமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்காட்டுதாங்கல் தனக்கோட்டி ராஜா தெருவில் செயல்பட்டு வந்த எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் சென்டரில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் சர்வீஸ் சென்டரில் இருந்த 175 எலக்ட்ரிக் பைக்குகள் முழுவதுமாக தீயில் கருகி நாசமானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version