Home செங்கல்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை – பத்திரமாக மீட்ட திருநங்கை

சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை – பத்திரமாக மீட்ட திருநங்கை

0

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தை ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரத்தில் வீசப்பட்ட குழந்தையின் அழுகுரல் கேட்டு, திருநங்கை ஒருவர், அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையை சாலையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version