Home Local 36 அடி உயர ஐயப்பன் சிலை – உத்திரமேரூரில் பிரதிஷ்டை

36 அடி உயர ஐயப்பன் சிலை – உத்திரமேரூரில் பிரதிஷ்டை

0
செங்கல்பட்டு மறைமலைநகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் 36 அடி உயரத்தில் ஐயப்பன் சிலை புதிதாக கட்டப்பட்டு இன்று யாகசாலை பூஜை நடத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மறைமலைநகர் அருகே பாவேந்தர் சாலையில் 29 ஆண்டுகளாக ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் சிலைக்கு பக்த ஜனா டிரஸ்ட் சார்பில் யாகசாலை பூஜை, வேள்வி பூஜை மற்றும் மகாவிஷ்ணு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தபட்டன. அதனை தொடர்ந்து கலச நீர் ஐயப்பன் மேல் ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். மேலும் சுமார் 108 பால்குடமும், 108 பன்னீர் குடத்திலும் பக்தர்கள் ஐயப்பன் மேல் பால் மற்றும் பன்னீரை ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் இந்த விழாவில் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version