செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்porur அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நகை வாங்க வந்தது போல நடித்து 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற முன்னாள் இந்தி ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாம்பாக்கம் – கொளத்தூர் செல்லும் சாலையில் நகைக்கடையை ரமேஷ் லால் (42) நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது கடைக்கு பெண் ஒருவர் நகை வாங்க வந்துள்ளார். அவர் பல்வேறு நகைகளை பார்க்க விரும்புவதாக கூறியதால், கடை உரிமையாளர் சில தங்க நகைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
அந்த நேரத்தில், அந்த பெண் தன்னுடன் கொண்டு வந்த கவரிங் நகையை கடையில் வைத்துவிட்டு, சுமார் 3 பவுன் தங்க நகையை திருடி எடுத்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சந்தேகமடைந்த கடை உரிமையாளர் ரமேஷ் லால், உடனடியாக Thazhambur Police Station காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோனா (28) என்பதும், தற்போது கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கண்ணாபுரம் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் முன்னாள் இந்தி ஆசிரியையாக பணியாற்றியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து போலீசார் மோனாவை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 3 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
