Home Politics “ஆர்த்தி பற்றிப் பேசக் கூடாது!”: பாடகி கெனிஷாவிற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிடித் தடை!

“ஆர்த்தி பற்றிப் பேசக் கூடாது!”: பாடகி கெனிஷாவிற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிடித் தடை!

0

நடிகர் ‘ஜெயம்’ ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து விவகாரம் சட்டப் போராட்டமாக மாறி வரும் நிலையில், ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்கப் பாடகி கெனிஷாவிற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தியைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், ரவி மோகனின் தோழியாக அறியப்படும் பாடகி கெனிஷா, ஆர்த்தி ரவியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஆர்த்தி ரவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் வாதிடுகையில், “கெனிஷாவின் ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துக்களால் ஆர்த்தி ரவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சமூக வலைதளங்களில் பதியப்பட்டுள்ள இத்தகைய பதிவுகள் ஆர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கௌரவத்தையும் பாதிக்கின்றன. எனவே, அந்தப் பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மனுவை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், ஆர்த்தி ரவிக்கு எதிராக எவ்விதமான அவதூறு கருத்துக்களையும் கெனிஷா தெரிவிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக ஆர்த்தி ரவி தாக்கல் செய்துள்ள மனுவிற்குப் பதிலளிக்கும்படி பாடகி கெனிஷாவிற்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரங்களில் சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்புவது சட்டப்படி குற்றம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version