Home Trending/Viral Trending லுங்கி இங்கிடிக்குத் தலையில் காயம்: டெல்லி கேபிடல்ஸ் அணி கொடுத்த நிம்மதி அப்டேட்!

லுங்கி இங்கிடிக்குத் தலையில் காயம்: டெல்லி கேபிடல்ஸ் அணி கொடுத்த நிம்மதி அப்டேட்!

0

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மைதானத்திற்குள்ளேயே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது, சக வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது மூன்றாவது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அக்ஷர் படேல் வீசிய பந்தை பிரியான்ஷ் ஆர்யா மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடித்தார்; அந்தப் பந்தை கேட்ச் பிடிக்க லுங்கி இங்கிடி பின்னோக்கி ஓடினார். அப்போது நிலைதடுமாறி விழுந்தபோது, அவரது தலை தரைப்பகுதியில் பலமாக மோதியது. இதனால் எழ முடியாமல் வலியால் துடித்த அவருக்கு, மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. நிலைமையின் தீவிரத்தைக் கருதி, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் கரோல் பாக்கில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு (Max Hospital) அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்குப் பதிலாக விப்ராஜ் நிகாம் ‘கன்கஷன் சப்ஸ்டிடியூட்’ (Concussion Substitute) ஆகக் களமிறங்கினார்.

தற்போது வெளியாகியுள்ள மருத்துவத் தகவல்களின்படி, லுங்கி இங்கிடிக்குத் தலையில் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமில்லை என்றும், தற்போது அவர் நினைவுடன் சீராக இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ள அவர், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லுங்கி இங்கிடி நலமுடன் இருப்பதாக வந்த செய்தி, டெல்லி கேபிடல்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. முன்னதாக இதே போட்டியில் டெல்லி அணி 264/2 ரன்கள் குவித்து, கே.எல்.ராகுல் அதிரடியாக 152* ரன்கள் விளாசியிருந்த போதிலும், பஞ்சாப் அணி 265 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version