Home Trending/Viral Trending ஆயிரக்கணக்கில் செலவு பண்ணாதீங்க – இயற்கையான ‘டாக்டர் பிஷ்’ சிகிச்சை!

ஆயிரக்கணக்கில் செலவு பண்ணாதீங்க – இயற்கையான ‘டாக்டர் பிஷ்’ சிகிச்சை!

0

மூணாறு, 2026 ஏப்ரல் 24: இன்றைய அவசர உலகில் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பாதங்களைப் பராமரிக்கவும் பலரும் தேடிச் செல்லும் ஒரு வழி ‘பிஷ் ஸ்பா’ (Fish Spa). ஷாப்பிங் மால்கள் முதல் பெரிய ஸ்பா சென்டர்கள் வரை எங்குப் பார்த்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்தச் சிகிச்சைக்கு, சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஒரு பைசா கூடக் கூடுதல் செலவு இல்லாமல், இயற்கையான சூழலில் இந்த அனுபவத்தைப் பெற ஒரு அட்டகாசமான இடம் இருக்கிறது.

இந்த ஸ்பாவில் பயன்படுத்தப்படும் மீன்களுக்கு ‘கார்ரா ரூஃபா’ (Garra rufa) என்று பெயர்; இவற்றை அன்போடு ‘டாக்டர் பிஷ்’ என்றும் அழைப்பார்கள். இந்த மீன்களுக்குப் பற்கள் கிடையாது என்பதால், இவை உங்கள் காலில் உள்ள இறந்த செல்களை (Dead Cells) மென்மையாக அரித்து எடுத்துவிடும். எவ்வளவு கிரீம் தடவினாலும் சரியாகாத பாத வெடிப்புகளை நீக்கி, பாதங்களைப் பஞ்சு போல மென்மையாக்குவதில் இந்த மீன்கள் கில்லாடிகள். மேலும், மீன்கள் கால்களைத் தீண்டும்போது ஏற்படும் ஒருவித அதிர்வு, கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.

இத்தகைய விலை உயர்ந்த பிஷ் ஸ்பா அனுபவத்தை நீங்கள் இலவசமாகப் பெற விரும்பினால், கேரளா மாநிலம் மூணாறில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சிக்கு (Lakkam Waterfalls) கண்டிப்பாகச் செல்லுங்கள். இங்குள்ள குளிர்ந்த நீரில் இயற்கையாகவே இந்த வகை மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. நீங்கள் பாறைகளில் அமர்ந்து கால்களை நீரில் நனைத்தாலே போதும், நூற்றுக்கணக்கான மீன்கள் உங்களைச் சூழ்ந்து கொண்டு இலவசமாகப் பிஷ் ஸ்பா செய்துவிடும். இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்லக் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதி உண்டு; நுழைவுக் கட்டணமாக வெறும் 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சிறிய சுற்றுலா சென்ற நிறைவும், மன அழுத்தம் நீங்கிய புத்துணர்வும் ஒரே இடத்தில் கிடைப்பது கூடுதல் சிறப்பு.

NO COMMENTS

Exit mobile version