Sunday, April 12, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
Home தமிழ்நாடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – நடைமேடை எண்கள் அறிவிப்பு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – நடைமேடை எண்கள் அறிவிப்பு

0
4

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு பேருந்துகள் எங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் பேருந்துகள் புறப்படாது என்றும், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு பேருந்துகள் எங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை செங்கோட்டை பேருந்துகள் நடைமேடை எண் 1-ல் நிறுத்தம்.

ராமேஸ்வரம் பேருந்துகள் 3, கடலூர் பேருந்துகள் 9, கரூர் பேருந்துகள் 4, 6ஆம் நடைமேடைகளில் நிறுத்தம்.

திருச்சி, குமுளி, கும்பகோணம் செல்லும் அரசு பேருந்துகள் நடைமேடை எண் 4ல் நிறுத்தம்.

கள்ளக்குறிச்சி 8, கன்னியாகுமரி 1, 2, கும்பகோணம் 4, கோவை பேருந்துகள் 6வது நடைமேடையில் நிறுத்தப்படும். கோவை, திருப்பூர், கரூர் பேருந்துகள் நடைமேடை எண் 6ல் நிறுத்தம்.

அரியலூருக்கு இயக்கப்படும் பேருந்துகள் 5, 8 ஆகிய நடைமேடைகளில் நிறுத்தம். சிதம்பரம் 9, செங்கோட்டை 1, சிவகாசி 2, சேலம் 6, தஞ்சாவூர் பேருந்துகள் 4ம் எண் நடைமேடையில் நிறுத்தம்.

திண்டுக்கல் 4, திருச்சி 4, திருச்செந்தூர் 1, 2, நெல்லை பேருந்துகள் 1, 2ஆம் எண் நடைமேடையில் நிறுத்தம்.

திருவண்ணாமலை 7, திருவாரூர் 5, தேனி 4, நாகர்கோவில் 1, 2 புதுச்சேரி பேருந்துகள் 9 நடைமேடையில் நிறுத்தம். மதுரை 3, விழுப்புரம் 8, மார்த்தாண்டம் 1, 2, வேளாங்கண்ணி 5ஆம் நடைமேடையில் பேருந்துகள் நிறுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here