Home செங்கல்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஸ்தம்பிப்பு – பஸ்களின் பின்னால் ஓடி சீட் பிடிக்கும் பயணிகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஸ்தம்பிப்பு – பஸ்களின் பின்னால் ஓடி சீட் பிடிக்கும் பயணிகள்

0

சித்ரா பௌர்ணமி, கோடை விடுமுறை கூட்டம் காரணமாக கிளாம்பாக்கத்தில் பரபரப்பு நிலவி, உயிருக்கு ஆபத்தான காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தின.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் புறப்பட்டதால், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்ல பக்தர்கள் அதிக அளவில் திரண்ட நிலையில், அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தாலும், போதிய அளவில் பேருந்துகள் கிடைக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

திருவண்ணாமலை, பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் குறைவாக இருந்ததால், பலர் நீண்ட நேரம் காத்திருந்தனர். சில இடங்களில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் வராததால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.

பேருந்துகள் வந்தவுடன் இருக்கையைப் பிடிக்க பயணிகள் பின்னால் ஓடி, ஜன்னல் வழியாக ஏறி செல்லும் ஆபத்தான காட்சிகளும் காணப்பட்டன. இதனால் பேருந்து நிலையத்தில் பதற்றம் நிலவியது.

#Kilambakkam #BusStand #ChitraPournami #TravelRush #BreakingNewsTamil

NO COMMENTS

Exit mobile version