கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு

0
2

கேரள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் முதல்வராக வி.டி. சதீசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேசி வேணுகோபால் மற்றும் ரமேஷ்

ஆகியோரிடம் அதிருப்தி நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளராக உள்ள கே.சி. வேணுகோபாலுக்கு கட்சியில் உயர்ந்த பொறுப்பு வழங்கப்படும் என்று மேலிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சமரச மனநிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ரமேஷ் சென்னித்தலா இன்னும் அதிருப்தியிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வராக அறிவிக்கப்பட்ட சதீசனுக்கு அவர் உடனடியாக வாழ்த்து தெரிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரமேஷ் சென்னித்தலா, “சதீசனுக்கு என் வாழ்த்துகள். அவருக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் முழு ஆதரவு அளிப்பார்கள். அமைச்சரவை அமைப்பது முதல்வரின் முடிவு” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, ரமேஷ் சென்னித்தலாவை அமைச்சரவையில் இணைக்க காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. Rahul Gandhi மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்ஷி நேற்று சென்னித்தலாவின் இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் மே 18ஆம் தேதி திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்ட 20 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக மற்றும் ஆந்திர மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் Vijay அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள சதீசன், தனக்கு அதிக பாதுகாப்பு தேவையில்லை என்றும், போக்குவரத்தை நிறுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல விரும்புவதாகவும் கேரள போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.