Home Trending/Viral Trending நிதி சிக்கலை தாண்டி இன்று வெளியாகும் கருப்பு

நிதி சிக்கலை தாண்டி இன்று வெளியாகும் கருப்பு

0

கருப்பு திரைப்படம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. Suriya நடிப்பில், RJ Balaji இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக Trisha Krishnan நடித்துள்ளார். இசையை Sai Abhyankkar அமைத்துள்ளார். முதலில் மே 14ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட நிதி சிக்கல்களால் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

குறிப்பாக சூர்யாவின் சமீபத்திய படங்களான Kanguva மற்றும் Retro எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், ‘கருப்பு’ திரைப்படம் நடிகர் சூர்யாவின் கம்பேக் படமாக அமையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கண்கலங்கியபடி பேசிய அவர், படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், “சூர்யா இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி ‘கருப்பு’ ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும்” என்று உருக்கமாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் S. R. Prabhu அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், படம் இன்று வெளியாகும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் சூர்யாவும் தனது எக்ஸ் தள பதிவில், “எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. கருப்பு இன்று வெளியாகிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் Dream Warrior Pictures நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ரசிகர்களின் ஆதரவும் நம்பிக்கையும் தான் அனைத்து தடைகளையும் கடக்க உதவியதாக தெரிவித்துள்ளது. இதனால் ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version