தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, தனது ஆதரவாளர்களுடன் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அவர் இன்று மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம், திருக்கச்சூர் மற்றும் பேரமனூர் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்குத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரமிக்கத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிரேனைப் பயன்படுத்தி சுமார் 25 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மாலை வேட்பாளருக்கு அணிவிக்கப்பட்டது. ஜேசிபி (JCB) இயந்திரம் மூலம் வழிநெடுகிலும் டன் கணக்கிலான மலர்களை வாரி இறைத்துத் தொண்டர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையாக நின்று வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கார்த்திக் தண்டபாணி, தமிழக முதலமைச்சர் கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார்:
கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளையும், தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு, என்னை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தத் தொகுதி மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நான் என்றும் பாடுபடுவேன்,” என உறுதி அளித்தார்.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்ற வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, ஒவ்வொரு தெருவாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளருக்குக் கிடைத்து வரும் இந்த எழுச்சியான வரவேற்பு, தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
karthik-dhandapani-chengalpattu-grand-campaign
