Jwala Gutta, தாய்ப்பால் தானம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரின் பாராட்டை பெற்றுள்ளது. Vishnu Vishal-இன் மனைவியான அவர், பிரசவத்துக்கு பிந்தைய முதல் ஆண்டில் மட்டும் 60 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாய்ப்பால் தானம் என்பது பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றக்கூடிய மிகப்பெரிய மனிதநேய செயல் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடல்நலக் குறைவுடன் அல்லது குறைபிரசவமாக பிறக்கும் குழந்தைகளுக்கு 100 மில்லி தாய்ப்பால் கூட உயிர் காக்க உதவக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை பிறந்த தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும், அதற்காக அரசு மருத்துவமனைகளை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெறலாம் என்றும் ஜுவாலா கட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஜுவாலா கட்டாவின் மனிதநேய செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மிக முக்கியமானது என்பதையும், தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜுவாலா கட்டாவின் இந்த முயற்சி, பல தாய்மார்களுக்கு விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





