Home செங்கல்பட்டு இந்தியன் வங்கியில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

இந்தியன் வங்கியில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

0

செங்கை: பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு பெற நல்ல வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி சார்பில் Specialist Officers பணிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 22 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், Any Degree, B.E., B.Tech உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி துறையில் வேலை பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் பணியிடத்தின் அடிப்படையில் சம்பள விவரம் மாறுபடும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் திறமையும் கொண்டவர்கள் மட்டுமே இறுதியாக பணியமர்த்தப்படுவர்.

ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளமான https://ibpsreg.ibps.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 28) கடைசி நாள் என்பதால் தாமதிக்காமல் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து பயன்பெறச் செய்யுங்கள்.

NO COMMENTS

Exit mobile version