Home செங்கல்பட்டு பேருந்து ஓட்டுனர்கள் மொபைல் பயன்படுத்தினால் நடவடிக்கை

பேருந்து ஓட்டுனர்கள் மொபைல் பயன்படுத்தினால் நடவடிக்கை

0

தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்துவதற்கு மீண்டும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுனர்கள் மொபைல் போன் வைத்திருக்கக் கூடாது மற்றும் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், பல ஓட்டுனர்கள் சட்டைப்பையில் மொபைல் போன் வைத்துக்கொண்டு, பயணத்தின் இடையே பயன்படுத்தி வருவதாக பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பணியின் போது மொபைல் பயன்படுத்துவதால் கவனச்சிதறல் ஏற்பட்டு பல இடங்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஓட்டுனர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் மொபைலை சட்டைப்பையில் வைத்திருப்பதற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் நடைபெறும் திடீர் ஆய்வுகளின் போது ஓட்டுனர்கள் மொபைல் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்களுக்கும் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version